1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. fefsi vijayan anry with tamil cinema industry

விஜயை காரி துப்பிட்டு இன்னைக்கு ஏன் அவர போய் பாக்குறே!.. FEFSI விஜயன் கோபம்!..

karunas vijay
திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறியிருக்கிறார் விஜய். அவர் அரசியல் கட்சியை துவங்கிய போது திரைத்துறையிலிருந்து யாரும் அவரை ஆதரிக்கவில்லை. சிலருக்கு உள்ளுக்குள் ஆதரவு மனப்பான்மை இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. அதற்கு முக்கிய காரணம் ஆளுங்கட்சியான திமுகவை நாம் ஏன் பகைத்துக் கொள்ளவேண்டும் என்பது முக்கிய காரணமாக இருந்தது..

விஜயுடன் பல படங்களில் நடித்த நாசர் கூட மலேசியாவில் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய போது விஜய் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அதேபோல், ஒரு திமுக விழாவில் திமுகவுக்கு ஆதரவாகவும், விஜயை மறைமுகமாக விமர்சித்தும் பேசினார்.ஒருபக்கம் நடிகர் கருணாஸ் விஜயை மிகவும் கடுமையாக விமர்சித்தார். விஜய் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற மாட்டார் என்றெல்லாம் தொடர்ந்து சகட்டுமேனிக்கு விஜயை திட்டினார்..

ஆனால், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது ஆட்சி அமைத்து விட்டார்கள். விஜயும் முதலமைச்சராகிவிட்டார். விஜய் முதல்வராக பதவியேற்றவுடன் நாசர், கருணாஸ் ஆகியோர் நடிகர் சங்கத்தின் சார்பாக அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொன்னார்கள்.

இந்நிலையில், இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்த FEFSI விஜயன் ‘விஜய் சார் ஜெயிக்கிறதுக்கு முன்னாடி சினிமாவில் இருக்க பல நடிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுக்கல.. ஆனா அன்னைக்கு காரி காரி துப்புன எல்லாரும் இன்னைக்கு அவர் முதலமைச்சரானதும் போய் முதல் ஆளா பார்க்கிறான். அவருக்கு எவ்வளவோ வலிச்சிருக்கும்.. அவருக்கு வலிச்சதோ இல்லையோ எங்கள மாதிரி ஆட்களுக்கு வலிச்சது. அன்னைக்கு திட்டிட்டு இப்ப ஏன் அவரை போய் பாக்குற?.. மனசாட்சி வேணாமா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
தங்கம் வாங்காதீங்க!.. மோடி சொல்லியும் மக்கள் கேட்கலயே!.. அட போங்கப்பா!...