காங்கிரஸின் வியூக குழுவில் ஜான் ஆரோக்யசாமி?.. ராகுலிடம் விஜய் சொன்னது என்ன?..
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கிய போது அவருக்கு அரசியல் ஆலோசகராக வந்தவர் ஜான் ஆரோக்கியசாமி. விஜயிடம் வருவதற்கு முன்பு அவர் வேறு சில அரசியல் கட்சிகளிடமும் அரசியல் ஆலோசகராக இருந்திருக்கிறார்.
மக்கள் சந்திப்பு கூட்டத்திலிருந்து, பிரச்சாரம், தேர்தலை அணுகுவது, தேர்தல் வாக்குறுதி பட்டியலை தயார் செய்வது, திமுக கூட்டணியிலிருந்த கட்சிகளிடம் பேசி ஆதரவு பெற்றது என்பது போன்ற எல்லா விஷயங்களிலும் ஜான் ஆரோக்கியசாமியின் பங்கு இருக்கிறது. தற்போது வெற்றி பெற்று விஜய் முதல்வராகிவிட்ட நிலையில் ஜான் ஆரோக்கியசாமி விஜயின் அரசியல் ஆலோசகராக நீடித்து வருகிறார்..
இந்நிலையில், சமீபத்தில் டெல்லி சென்ற விஜய் அங்கு ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரிடம் பேசியபோது இந்தியா கூட்டணிக்குள் இணைவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.. 2029 தேர்தலில் கண்டிப்பாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் தவெகவை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் என்னுடைய வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி முக்கிய பங்கு வகித்தார். எனவே, அவை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. காங்கிரஸ் வியூக வகுப்பு குழுவில் அவரையும் இடம் பெற செய்யுங்கள் என்று சிபாரிசு செய்தாராம்..
அதை பரிசளிப்பதாக ராகுல் காந்தியும் சொல்லியிருக்கிறார்.. எனவே தற்போது காங்கிரஸ் வியூக குழுவில் இருக்கும் சுனில் கனகோலுவை தூக்கிவிட்டு அந்த இடத்தில் ஜான் ஆரோக்கியசாமியை நியமிக்க வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது..