1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actor vijay is returning the money to distributors

ஜனநாயகனை டேக் ஓவர் பண்ணிய விஜய்!.. ஆனா ஒரு கண்டிஷன்!..

jananayagan
விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியாக வேண்டிய நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் இதுவரை ரிலீஸாகவில்லை. விஜய் தமிழ்நாட்டில் முதலமைச்சராக பின்னரும் இப்போது வரை இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை.

இந்த படத்திற்காக தயாரிப்பாளரிடம் விநியோகஸ்தர்கள் கொடுத்த தொகையை தயாரிப்பாளர் திருப்பி கொடுத்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது..

இந்நிலையில்தான் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியே தெரியவந்திருக்கிறது. படத்தை திருப்பி கொடுக்கப்போவது தயாரிப்பாளர் இல்லையாம்.. விஜய் தரப் தான் பணத்தை திருப்பி கொடுக்கப் போகிறது என்கிறார்கள். அதோடு மொத்த படத்தையும் தயாரிப்பாளரிடமிருந்து இருந்து விஜய் வாங்கிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

அதாவது இந்த இந்த படத்தில் லாப நஷ்ட கணக்குகள் விஜயையே சாரும்ன் என்கிறார்கள். வருகிற 22ம் தேதி பணத்தை திருப்பி கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். அதேநேரம் ஒரு கண்டிஷனையும் சொல்லியிருக்கிறார்கள். வருகிற 19ம் தேதி தணிக்கை சான்றிதழ் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி கிடைத்துவிட்டால் ஜூன் 25 அல்லது 26 படம் வெளியாகும் எனவும் விஜய் தரப்பு வினியோகஸ்தர்களிடம் சொல்லியிருக்கிறதாம்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
அதிமுகவில் அடுத்தடுத்து அதிர்ச்சி: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் விலகல்!