1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin raising quesiton to cm vijay

சவால் விட்டுட்டு இப்ப ஏன் சைலண்ட் மோட்ல இருக்கீங்க!.. விஜயை விளாசிய ஸ்டாலின்!..

stalin vijay
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. 10 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் கூட பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். போலீசாரும் உடனடியாக குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள். ஆனாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் 12 பாலியல் வன்முறைகள் நடைபெற்றிருக்கிறது. அதுவும் திருவள்ளுவர் அருகே மூன்று வயது சிறுமியை வட மாநில வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படது தொடர்பாக செய்திதாள்களில் வெளிவந்த செய்திகளை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் ‘திறமையான அதிகாரிகளை நியமித்துவிட்டேன். சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்’ என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?

மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? குற்றவாளிகள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சவாலும், சவடாலும் விட்டவர், எப்போது சைலண்ட் மோடில் இருந்து வெளியே வருவார்?

மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறதா?!.. அமைச்சர் சிடி நிர்மல்குமார் சொல்வது என்ன?..