1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Raj Thackeray Questions Vivek Oberoi and R Madhavan's Move to Dubai While Praising PM Modi

இந்தியா நல்லா இருக்குன்னா எதுக்கு துபாய் போய் செட்டில் ஆனீங்க.. நடிகர் மாதவனை கேள்வி கேட்கும் ராஜ் தாக்கரே..

Tamil
மத்திய பாஜக ஆட்சியில் இந்தியாவில் எல்லாம் மிக சிறப்பாக இருப்பதாக புகழும் விவேக் ஓபராய் மற்றும் ஆர். மாதவன் போன்ற நடிகர்கள் துபாயில் குடியேறியுள்ளது ஏன் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். 
 
மும்பையில் நடைபெற்ற மாணவர் அணி நிகழ்ச்சியில் பேசிய அவர், மோடி பயோபிக் படத்தில் நடித்த விவேக் ஓபராயும், மோடியை புகழ்ந்த மாதவனும் தங்கள் குடும்பத்துடன் துபாயில் வசிப்பதை சுட்டிக்காட்டினார். இந்தியா மீது இவ்வளவு பற்றுள்ளவர்கள் வெளிநாட்டில் வாழ்வது ஏன் என்றும், அரசு ஆதரவு படங்களில் நடித்துவிட்டு மீண்டும் துபாய்க்கே சென்றுவிடுவதாகவும் அவர் விமர்சித்தார்.
 
மேலும், டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களின்போது பிரதமர் மோடிக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட அவதூறு மொழியைக் கண்டித்த ராஜ் தாக்கரே, அதேசமயம் மகாத்மா காந்தி, நேரு மற்றும் தாக்கரே குடும்பத்தினர் வரை பாஜக ஆதரவு தொண்டர்கள் மற்றும் ஐடி விங் மூலம் எப்படி தரம் தாழ்ந்து விமர்சிக்கப்படுகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். 
 
நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அதிருப்திகளே இதுபோன்ற போராட்டங்களுக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் கைவிரல் ரேகை பதிவு.. இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்...