தொடர்புடைய செய்திகள்
- ஒரே நாளில் 12 இடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை!.. சென்னை மக்கள் அதிர்ச்சி..
- சவால் விட்டுட்டு இப்ப ஏன் சைலண்ட் மோட்ல இருக்கீங்க!.. விஜயை விளாசிய ஸ்டாலின்!..
- தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறதா?!.. அமைச்சர் சிடி நிர்மல்குமார் சொல்வது என்ன?..
- பயிர் கடன் 100 சதவீதம் தள்ளுபடி!. விஜயின் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!...
- பூங்கொத்துக்கு பதில் படிப்பு செலவு!.. முதல்வர் விஜயை இம்ப்ரஸ் செய்த விஷால்!...
நான் சொன்னது இதுதான்!.. என்ன மன்னிச்சிடுங்க!. மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்..
நடிகர் மாஸ்டர் மகேந்திரன் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது தவெக ஆட்சிக்கு ஆதரவாக பேசினார். சென்னையில் தொடர்ந்து மின்வெட்டு பிரச்சினை வருது தொடர்பாக பேசிய அவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் கரண்ட் வந்துவிடுமா? என கேட்டார். அதன் பின் ஏன் மின்சாரத்தை நம்பி கொண்டிருக்கிறீர்கள்.. மக்கள் சோலாரை பயன்படுத்தலாம் என்று சொன்னார். ஆறு மாதம் தவெக அரசை எந்த கேள்வியும் கேட்காதீர்கள் என்று சொன்னார். இது எல்லாமே விமர்சனத்திற்கு உள்ளானது..
சமூக வலைதளங்களில் பலரும் அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அவரை ட்ரோலும் செய்தார்கள். இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து மாஸ்டர் மகேந்திரன் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் சமீபத்தில் நான் பேசிய விஷயம் சர்ச்சையாகியிருக்கிறது. நான் யாரையெல்லாம் பெரிதாக மதிக்கிறேனோ அவர்கள் கூட எனக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் மகேந்திரன் சொல்ல வந்தது இதுதான் என சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்கள் சொல்லவில்லை. பரவாயில்லை..
கேள்வி கேட்டால் கரண்ட் வந்துவிடுமா என கேட்டேன். அது பொதுமக்களை நோக்கிய கேள்வி அல்ல. மின்வெட்டை வைத்தும், மக்களின் உணர்வுகளை வைத்து அரசியல் செய்பவர்களை பார்த்துதான் அந்த கேள்வியை நான் கேட்டேன். ஆறு மாதம் பேசாதீர்கள் என்று சொன்னேன். அதுவும் அரசியல்வாதிகளை பார்த்துதான். முதல்வர் விஜய் அண்ணாவே எனக்கு அவகாசம் கொடுங்கள்.. எல்லாவற்றையும் சரி செய்து ஒரு நல்லாட்சியை கொடுக்கிறேன் என சொல்லியிருக்கிறார். அவரின் சார்பாகவே நானும் அதை சொன்னேன்..
அடுத்து சோலார் பயன்படுத்துங்கள் என்று சொன்னேன். அது சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை. நான் கொச்சின் சென்றிருந்தபோது அங்கு விமான நிலையம் முழுவதும் சோலாரில் எடுத்த மின்சாரத்தைதான் பயன்படுத்துகிறார்கள். அதை பார்க்கும்போது தமிழகத்தில் ஏன் இப்படி செய்ய முடியாதா? என்கிற ஆதங்கத்தில்தான் அப்படி சொன்னேன். என் வீட்டிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றால் என் வீட்டு கரண்ட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்.. நானும் மக்களை போல கஷ்டப்படுகிறேன் என்கிற அர்த்தத்தில்தான் அப்படி சொன்னேன்..
மகேந்திரன் மிகவும் ஆட்டிட்டியூட் காட்டுகிறான்.. அவனுக்கு ரொம்ப திமிர்.. என்றெல்லாம் பேசுகிறார்கள்.. சிறுவயதில் ஏதோ ஒரு படத்தில் இயக்குனரிடம் கால் மேல் கால் போட்டு பேசினேன் என்கிறார்கள். அதை ஊடகத்தில் சொன்ன நபரிடம் நான் போன் செய்து அப்போட்தே பேசினேன். அதற்கு அவர் இல்லைப்பா.. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்று சொல்லிவிட்டார்.
இல்லாத ஒன்றை பேசுகிறார்கள். நான் திமிர் பிடித்தவன் இல்லை. நான் மக்களை மதிக்க மாட்டேன் என்கிறார்கள்.. நான் இப்போது ஒரு வேளையாவது சாப்பிடுகிறேன் என்றால் அது மக்கள் எனக்கு போட்டதுதான்.. அந்த மக்களை எப்படி நான் ஏளனமாக நினைப்பேன்?..
எப்படியிருந்தாலும் நான் பேசியதற்கு யாராவது மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தத்தையும், மன்னிப்பையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார்.