தங்கம் வாங்காதீங்க!.. மோடி சொல்லியும் மக்கள் கேட்கலயே!.. அட போங்கப்பா!...
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலை தாண்டியும் இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரித்திருக்கிறது.
கடந்த 10ம் தேதி ஒரு செய்தியை வெளியிட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார சிக்கலை சமாளிக்க மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம், பெட்ரோலிய பொருட்களில் சிக்கனம் காட்டுங்கள், திருமணம் உள்பட சுப நிகழ்ச்சிகளுக்கு ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்றெல்லாம் கூறியிருந்தார்.
அதோடு தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்காக இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் மத்திய அரசு உயர்த்தியது. இதன் காரணமாக தங்கம் ஒரு சவரனுக்கு 8000 ரூபாய் அதிகரித்தது..
தற்போது இந்தியாவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1.15 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே ஏழைகள் மட்டுமில்லாமல் நடுத்தர மக்களுக்கே எட்டாக்கனியாக தங்கம் மாறிவிட்டது
. ஒரு பக்கம் தங்கம் வேண்டாம் என பிரதமர் மோடி கோரிக்கையை வைத்த போதிலும் தங்கத்தின் இறக்குமதி இந்தியாவில் அதிகரித்திருக்கிறது.
தங்கத்தின் இறக்குமதி கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இந்தாண்டு மே மாதம் 34 சதவீதம் உயர்ந்து 3.41 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதேசமயம் வெள்ளியின் இறக்குமதி 86.65 சதவீதம் குறைந்திருக்கிறது.