1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. EPS team plan to submit petition to election commission

ஓபிஎஸ் மனுவுக்கு எதிர்மனு அளிக்க திட்டம்! – எடப்பாடியார் பேச்சுவார்த்தை!

ADMK
அதிமுக தலைமை தொடர்பான விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனுவுக்கு பதில் மனு அளிக்க எடப்பாடி பழனிசாமி அணி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.

இதனால் டெல்லி புறப்பட்டு சென்ற ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்த புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். தற்போது அதற்கு எதிராக பதில்மனு அளிப்பது தொடர்பாக சி.வி.சண்முகம் மற்றும் எடப்பாடி பழனிசாமி விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்துடன் தேர்தல் ஆணையத்திடம் பதில் மனு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஈபிஎஸ்-க்கு கூடும் பலம், ஓபிஎஸ்-க்கு சரியும் செல்வாக்கு - அதிமுக நிலவரம்!