1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (13:55 IST)

நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒரு தலைமையின் கீழ் இருக்கும்: சசிகலா

sasikala
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு தலைமையின் கீழ் வரும் என சசிகலா செய்தியாளர்களிடம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக மாறுவார் என்று அதிமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர்
 
இந்த நிலையில் ஓபிஎஸ் ஈபிஎஸ் பிளவு பட்டிருக்கும் நிலையில் சசிகலா இடையில் புகுந்து அதிமுகவை கைப்பற்ற முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது
 
அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.
 
ஒரு தலைமையின் கீழ் என சசிகலா கூறியது தன்னுடைய தலைமையின் கீழ்தான் என மறைமுகமாக கூறியிருப்பதாக அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்