தொடர்புடைய செய்திகள்
- நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒரு தலைமையின் கீழ் இருக்கும்: சசிகலா
- பன்னீர்செல்வமா அனுதாபத்தை தேடும் கண்ணீர் செல்வம் - ராஜன் செல்லப்பா விளாசல்!
- சின்னவர் பட்டம் சின்ன தத்தி ஆனது... இணையத்தில் பங்கம்!
- ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ் - ஜெயகுமார் சாடல்!
- கூட்டத்தில் ஆலோசித்தது என்ன? ஜெயக்குமார் விளக்கம்
புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் படம்!
திமுகவின் பி-அணியாக (B Team) செயல்படும் ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை.
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓ.பன்னீர் செல்வத்தின் உருவப் படத்தை தொண்டர்கள் கிழித்தனர்.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் புகைப்படத்தை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் புகைப்படத்துடன் பேனர் வைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக கட்சி பதாகைகளில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பின்னீர்செல்வம் உருவ படம் இடம் பெற்றிருந்தது. இந்த பதாகையில் இருந்த படத்தை நிர்வாகிகள் கிழித்தனர்.
பின்னர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி கிழக்கு மாநிலச் செயலாளருமான அன்பழகன் பேசியதாவது, அதிமுகவிற்கு விரோதமாக செயல்பட்டு வரும் ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோரின் சதி செயலை எடப்பாடி பழனிச்சாமி முறியடித்துள்ளார்.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறித் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற திமுகவின் பி-அணியாக (B Team) செயல்படும் ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு புதுச்சேரி அதிமுக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
