செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 27 ஜூன் 2022 (15:48 IST)

அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி கிடையாது: உயர்கல்வித்துறை தகவல்!

ADMK
அதிமுக பொதுக் குழுவைக் கூட்டுவதற்காக மாற்று இடத்தை தேடி வரும் நிலையில் ஈசிஆர் சாலையில் உள்ள கல்லூரி ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இதுகுறித்து உயர் கல்வித்துறை தகவல் தெரிவித்த போது அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கல்லூரிகளில் நடத்த உயர்கல்வித்துறையின் அனுமதி கிடைக்காது என்று தெரிவித்துள்ளது
 
பள்ளி கல்லூரிகளில் சாதி மத இயக்க செயல்பாடுகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளதால் வேறு இடத்தை தேட வேண்டிய நிலையில் தற்போது அதிமுக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது