1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 27 ஜூன் 2022 (19:02 IST)

அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல்

OPS
அதிமுக பொதுக்குழு ஜூலை 15ஆம் தேதி கூட இருக்கும் நிலையில் இந்தப் பொதுக்குழு கூட்டம் தொடர்பான கேவியட் மனு ஒன்றை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த கேவியட் மனுவில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டால் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என்றும் ஒபிஎஸ் கேவியட் மனுவில் கூறியிருக்கிறார்
 
இதனால் அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது