1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vote perecentage is high compair with 2021

1 மணி நேரப்படி 17.2 சதவீத வாக்கு வித்தியாசம்!.. திமுகவுக்கு சாதகமா?.. பாதகமா?.. ஒரு அலசல்!..

mk stalin
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதியான இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட வாக்களிப்பதற்காக பலரும் தங்கள் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள்.

ஒருபக்கம் சென்னை போன்ற ஊர்களில் பேருந்து வசதி கிடைக்காததால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்கு பின்னர் அரசியல் காரணம் இருப்பதாகவும் அவர்கள் புகார் சொல்லி வருகிறார்கள்.

ஒருபக்கம் தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணிக்கு 17.69 வாக்குகள் பதிவாகியிருந்தது. அதேபோல் காலை 11 மணிக்கு 37.56 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மேலும், மதியம் ஒரு மணி நேரப்படி தமிழகத்தில் 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியிருதது.

2021 சட்டமன்றத் தேர்தலின் போது மதியம் ஒரு மணி நிலவரப்படி 39.61 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. ஆனால் தற்போது 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதாவது 2021 சட்டமன்ற தேர்தலில் ஒப்பிடும்போது 17.2 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியிருக்கிறது. இப்படியே சென்றால் மாலை 6:00 மணிக்குள் வாக்கு சதவீதம் 80ஐ தாண்டிவிடும் என கணிக்கப்படுகிறது.

பொதுவாக 80 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகள் பதிவானால் அது ஆளுங்கட்சிக்கு எதிராகவே அமையும் என்கிற கருத்து எப்போதும் உண்டு. அந்த வகையில் அதிகமான வாக்குகள் பதிவானால் அதை திமுகவுக்கு பாதகமாக அமையும் என கணிக்கப்படுகிறது. அதாவது தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள தவெகவுக்கு அதிக வாக்குகள் பதிவாகும் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
3 மணிக்கே 70 சதவீத வாக்குப்பதிவு!.. பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டாரா விஜய்?..