1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk administrator is arrested for taking video vote

விசில் சின்னத்துக்கு ஓட்டு போட்டு வீடியோ பகிர்ந்த தவெக நிர்வாகி கைது!...

vijay
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்தமுறை தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். 7 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. 5.75 கோடி பேர் வாக்களிக்கவிருக்கிறார்கள்.

வாக்களிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக பல ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த தேர்தலை பொருத்தவரை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் வழக்கம்போல் இந்த முறையும் தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது..

இதில் முக்கியமான ஒன்று வாக்குச்சவடியில் வாக்களிப்பதை வீடியோ எடுத்து சமூகவலைகளில் பகிர்ந்தால் கடுமையான தண்டனை அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால் திருப்பத்தூர் தொகுதியில் விசில் சின்னத்திற்கு வாக்களித்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட தவெக நிர்வாகி சக்திவேல் என்பவரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

அவர் வாக்குச்சாவடியில் வீடியோ எடுப்பது சிசிடிவி கேமரா மூலம் பதிவாகி இருந்தது. அதையடுத்து எழுந்த புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
அஜித் அப்படி சொல்லலயே!.. ஃபேக் நியூஸ்னு தெரியாம!.. ஸ்டாலினை ட்ரோல் பண்ணும் தவெகவினர்!...