விரைவில் டோல்கேட்டே இல்லாதே இந்தியா!.. நிதின் கட்காரி சொன்ன குட்நியூஸ்!..
இந்தியாவில் பல வருடங்களாகவே சுங்கச்சாவடி முறை(Toll Gate) இருக்கிறது. நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காகவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுகளிடம் பணம் வசூலிப்பதாக மத்திய அரசு சொல்கிறது. அதே நேரம் நெடுஞ்சாலை பராமரிக்க செலவிடும் தொகையை விட பல லட்சம் மடங்கு தங்களிடம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் சொல்கிறார்கள்.அதுவும் சுங்கச்சாவடி கட்டணம் என்பது அவ்வப்போது உயர்ந்து கொண்டே செல்கிறது..
இந்நிலையில்தான், சில வருடங்களுக்கு முன்பு Fastag முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால் வாகனங்கள் சுங்கச்சாவடியில் வெகு நேரம் நிற்பதும், காத்திருப்பதும் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில்தான், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போது வானங்கள் டோல்கேட்டில் நிற்பதை தவிர்க்கவும், எரிபொருள் விரயத்தை குறைக்கவும் மற்றும் டோல் நிர்வாக செலவுகளை கட்டுப்படுத்தவும் இந்திய அரசு மல்டி லேன் ஃப்ரி ஃப்ளோ (Multi lane free flow tolling system) தடையற்ற டிஜிட்டல் டோல் முறையை கொண்டு வரவிருக்கிறது. வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் சிறிதும் நிற்காமல் நேரடியாக செல்லும் வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் அமைக்கப்படவுள்ளது.