1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Education Department information to 12th Exam students

பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் 9 மணிக்கு வரவேண்டும்!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
நாளை (மே 5) தொடங்கவுள்ள 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 
கோடை வெயில் தற்போது கடுமையாக கொளுத்தி வரும் நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு பெரும் அவதியுற்று வருகின்றனர். ஏற்கனவே ஹரியானா ஒரிசா ஆகிய மாநிலங்களில் காலையில் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தமிழகத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு மட்டும் முன்கூட்டியே கோடை விடுமுறை விடுவது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். ஆலோசனைக்கு பின்னர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதனிடையே நாளை தொடங்கும் +2 பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கு பதில் 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கே வர வேண்டும் என்பதை அரசு தேர்வுத்துறை மாற்றியமைத்துள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ஆக ரத்தினவேல் மீண்டும் நியமனம் !