செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 3 மே 2022 (17:29 IST)

தேர்வு மையத்தில் செல்போனுக்கு தடை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

cellphone exam
தேர்வு மையத்தில் செல்போனுக்கு தடை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
 நாளை மறுநாள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் தேர்வு மையத்தில் செல்போனுக்கு தடை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது என்பதும் அதனை அடுத்து 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ தேர்வு மையத்திற்குள் செல்போன் வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.