ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 1 மே 2022 (12:30 IST)

நெல்லை பள்ளியில் மாணவர்கள் மோதல் விவகாரம்: 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

pallakkal school
நெல்லை பள்ளியில் மாணவர்கள் மோதல் விவகாரம்: 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
நெல்லையில் மாணவர்கள் மத்தியில் கையில் கயிறு கட்டும் விவகாரத்தில் சண்டை மூண்டது என்பதும் இந்த மோதலில் ஒரு மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் மாணவர்கள் மோதல் விவகாரத்தில் பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பாக்கியமேரி மற்றும் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
 
மேலும் மாணவர்கள் கையில் கயிறு கட்டும் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் மாணவர் ஜெயசூர்யா என்பவர் இறந்தது தொடர்பாக நேற்று மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.