செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 2 மே 2022 (10:25 IST)

காலையில் பெண்கள், மாலையில் ஆண்கள்: கல்லூரியில் ஷிப்ட் மாற்றம்?

College
அரசு கல்லூரிகளில் காலையில் மாணவிகள் மற்றும் மாலையில் மாணவர்கள் என ஷிப்ட் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
தற்போது அரசு கல்லூரிகளில் இரண்டு ஷிப்ட்களில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு ஷிப்ட்களில் மாணவ மாணவிகள் இணைந்து கல்லூரிக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழக முதல்வரின் ஆலோசனையின் பேரில் காலையில் மாணவிகளுக்கும் மாலையில் மாணவர்களுக்கும் என ஷிப்ட்கள்  மாற்றப்படவுள்ளதாகவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது இந்த நடைமுறைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன