1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gayathri Raguraman Summoned by Chennai Police Following DMK Protest

கேஸ் கொடுக்க போன என் மேலேயே கேஸ் போட்ருக்காங்க.. வீடியோவில் புலம்பும் ஜூலி...

காயத்ரி ரகுராம்
பிக்பாஸ் ஜூலி  தன்னை சென்னை பீச் காவல் நிலைய போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தம்மீது புதிய வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாகவே இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். தவெக அரசு மற்றும் அக்கட்சியின் கூட்டணிக் கட்சியினருக்கு எதிராக அவர் நடத்திய ஒரு போராட்டமே இதற்குக் காரணம் என அவர் கூறியுள்ளார். 
 
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற பதாகையை ஏந்தி ஜூலி அண்மையில் கடற்கரையில் ஒரு போராட்டம் நடத்தியிருந்தார். அந்தப் போராட்டத்தின் ஒரு பக்கத்தில் திமுக-வுக்கு வாக்களியுங்கள் என்ற பதாகையும் இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாகவே தற்போது அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
அலிஷா அப்துல்லா கொடுத்த புகாரின் பேரில் அடுத்த நாளே திருச்சி சூர்யா மற்றும் முக்தார்  ஆகியோர் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய ஜூலி, தனக்கு மட்டும் ஏன் இந்தத் துரித நடவடிக்கை மறுக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
 
மேலும், பெண்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகப் புகார் அளித்தால், அவர்கள் மீதே புதிய வழக்குகள் போடப்படும் என்ற அச்சம் நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு அவர் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டு நலன், வளர்ச்சி தான் முக்கியம்.. மத்திய அரசுடன் மோதல் இல்லை.. முடிவெடுத்த முதல்வர் விஜய்...!