1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. EPS Questions the Timing of Udhayanidhi Stalin's Arrest Amid Budget Session

உதயநிதி கைதில் சந்தேகம் வருகிறது.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

உதயநிதி ஸ்டாலின் கைது
பெண்களைப் பற்றி ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கைது செய்யப்பட்டு தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்ட அவரிடம் விசாரணைக்கு பின் இன்றே விடுதலை செய்யப்படுவார் என அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.
 
இந்த சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த கைது நடவடிக்கை குறித்து எழுப்பிய சந்தேகங்கள் அரசியல் களத்தில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. உதயநிதி ஸ்டாலின் தனது பொறுப்பின் மாண்பை அறியாமல் பெண்களை இழிவாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், அவருக்கு நாவடக்கம் தேவை என்றும் அவர் கூறினார். அதேசமயம், அவதூறு பேச்சுக்கு வழக்கு பதிவு செய்வது வேறு, ஆனால் நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அவசரமாக எதிர்க்கட்சி தலைவரைக் கைது செய்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
 
இந்த நடவடிக்கைக்கு பின்னால் ஏதேனும் அரசியல் பின்புலம் உள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும், இந்த பொய்க்கால் அரசு எதற்காக இப்படி கைது செய்ய துடிக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முந்தைய இந்த அதிரடி கைது நடவடிக்கை தமிழக அரசியலில் மேலும் அனலை கூட்டியுள்ளது.
 
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
உதயநிதிக்கு காவல்துறை ஜாமின்!.. இன்றே ரிலீஸ்!.. நீதிமன்றம் அதிரடி!...