1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy is not accepting vijay demand

விஜய் வைத்த டிமாண்ட்!.. ஷாக்கான பழனிச்சாமி!.. நடப்பது என்ன?...

vijay
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை. அல்லது மற்ற எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றும் சொல்லலாம். அதேநேரம் தவெகவுக்கு போய்விடுவோம் என சொல்லி காங்கிரஸ் திமுகவுடன் மூன்று சீட்டுகள் அதிகமாக பெற்று அந்த கூட்டணியில் இணைந்து விட்டது. எனவே, விஜய் தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.. தனித்து போட்டு விட்டாலே 30 சதவீத வாக்குகளை வாங்குவோம் என தவெகவின் முக்கிய நிர்வாகிகள் சொன்னாலும் விஜய் 15 சதவீத வாக்குகளை மட்டுமே வாங்குவார் என சில கருத்துக்கணிப்புகள் சொல்கிறது.

ஒருபக்கம், திமுகவை தோற்கடிக்க வேண்டுமெனில் விஜய் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என பலரும் சொல்கிறார்கள். ஆனால் விஜய் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.. விஜய் தங்கள் கூட்டணியில் இணைய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியும் பாஜகவும் எதிர்பார்க்கிறது.. ஆனால் 60க்கும் மேற்பட்ட தொகுதிகள் மற்றும் விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என தவெக தரப்பு சொன்னதால் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்து விட்டாராம். விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் இந்த கூட்டணி வேண்டாம் எனவும் அவர் சொல்லிவிட்டதாக தெரிகிறது..

ஆந்திர துணை முதல்வர் மற்றும் நடிகர் பவன் கல்யாண் மூலமும் பாஜக விஜய்க்கு தூது விட்டதாக செய்திகள் வெளியானது.. ஆனால் அதுவும் நடக்கவில்லை... அது மட்டும் நடந்திருந்தால் திருச்சியில் நடந்த பிரதமர் மோடி கலந்து கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் விஜயும் கலந்து கொண்டிருப்பார் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
ஒரு சீட்டுக்கு 15 கோடி!.. கறார் காட்டும் புஸ்ஸி ஆனந்த்?. தவெகவில் நடப்பது என்ன?..