செவ்வாய், 21 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: வியாழன், 12 மார்ச் 2026 (13:37 IST)

ஒரு சீட்டுக்கு 15 கோடி!.. கறார் காட்டும் புஸ்ஸி ஆனந்த்?. தவெகவில் நடப்பது என்ன?..

bussy anand
விஜய் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்பிலிருந்தே அவருக்கு நெருக்கமானவராக, அரசியல் தொடர்பான பணிகளை பார்த்து வந்தவர் புஸ்ஸி ஆனந்த். புதுச்சேரியில் புஸ்ஸி என்கிற தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றதால் அந்த தொகுதியின் பெயர் இவரின் பெயருக்கு முன்னால் சேர்ந்து கொண்டது. அரசியலுக்கு செல்வதற்கு முன் புதுச்சேரி விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் ஆனந்த் இருக்கிருக்கிறார். விஜயின் நம்பிக்கையை பெற்றுதால் இவருக்கு தவெகவின் பொதுச் செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது.

ஆனால், விஜயின் அப்பா எஸ்.ஏ.சி புஸ்ஸி ஆனந்த் இருக்கும்வரை கட்சி உருப்படாது என்றெல்லாம் பெட்டி கொடுத்திருந்தார். விஜயின் நம்பிக்கையை பெறுவதற்காக உண்மையான விசுவாசி போல ஆனந்த் நடிக்கிறார் என எஸ்.ஏ.சி புகார் சொன்னர்.

ஆனாலும் அதை விஜய் கண்டுகொள்ளவில்லை.. தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் வேட்பாளர்களை நியமிக்கும் தேர்ந்தெடுக்கும் பணியில் தவெக ஈடுபட்டிருக்கிறது.. இந்நிலையில் 10 முதல் 10 கோடி செலவு செய்தால் மட்டுமே எம்.எல்.ஏ சீட் என புஸ்ஸி ஆனந்த் கறார் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இதனால் பல மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.

அதேநேரம் விஜயின் கார் டிரைவருக்கு புஸ்ஸி ஆனந்த் தேர்தலில் போட்டியிட சீட் கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் கட்சிக்கும், தொழிலுக்கும் சம்பந்தமே இல்லாத, தொகுதி மக்களுக்கே யார் என்று தெரியாத சில தொழிலதிபர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் சீட் கொடுக்க முயற்சித்து வருவதாகவும் நிர்வாகிகள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்..