90 சீட்.. முதலமைச்சர் வேட்பாளர்!.. என்.டி.ஏ கூட்டணிக்கு டிமாண்ட் வைக்கும் தவெக!..
பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கினார். எனவே அவர் திமுகவுக்கு எதிர்க்கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் விஜய் அப்படி எந்த முயற்சியும் செய்யவில்லை. அதேநேரம் விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்த்து அவரை தங்கள் கூட்டணிக்குள் இணைக்க அதிமுக விரும்பியது.. சில பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாகவே இதை பேசினார். ஆனாலும் விஜய் இறங்கி வரவில்லை.
கரூர் விஷயத்தில் கூட விஜய்க்கு ஆதரவாகவே அதிமுகவும், பாஜகவும் பேசியது.. எப்படியும் நமது கூட்டணிக்கு விஜய் வந்து விடுவார் என அதிமுகவும், பாஜகவும் எதிர்பார்த்தது. ஆனால் விஜய் தொடர்ந்து அமைதி காத்து வந்தார். அதோடு காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டார். ஆனால் அது நடக்கவில்லை. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தவெகவுடன் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை. ஒருபக்கம் திமுகவை விஜய் தோற்கடிக்க விரும்பினால் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைவதுதான் நல்லது என அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்..
அரசியல் விமர்சகர்கள் மட்டுமல்ல.. தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் துவங்கி அருண்ராஜ், சிடி நிர்மல்குமார் உள்ளிட்ட பலருமே அதைத்தான் விரும்புகிறார்கள். தற்போது விஜயின் மனைவி சங்கீதா சொன்ன புகார் மற்றும் திரிஷாவுடன் விஜய் திருமணத்தில் கலந்துகொண்டதால் சரிந்து போன விஜயின் இமேஜ் காரணமாக அதிமுக கூட்டணியில் இணைந்தால்தான் வெற்றி கிடைக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், விஜய்க்கு அரசியல் ஆலோசனைகளை சொல்லிவரும் தவெக அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக சொல்லப்படுகிறது.. 90 தொகுதிகள் கொடுத்து விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவித்தால் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது பற்றி நாம் யோசிக்கலாம் என்கிறாராம் ஜான் ஆரோக்கியசாமி..
மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் நமக்கு விழாது.. அதோடு இளைஞர்கள் மற்றும் பெண்களின் எதிர்ப்பையும் நாம் பெற வேண்டிவரும். அதிமுகவை விட அதிக வாக்குகளை நாம் பெறுவோம்.. அதனால்தான் நம்மை கூட்டணிக்கு அழைக்கிறார்கள் என சொல்லி விஜயை அதிமுக கூட்டணிக்கு செல்ல விடாமல் அவர் தடுப்பதாகவும் சொல்லப்படுகிறது..