என் அம்மா பேருதான் இனிஷியல்!. அப்பா வேண்டாம்!.. ஜேசன் சஞ்சய் போடும் கையெழுத்து!..
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். தற்போது அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறிவிட்டார்.. அவர் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. விஜய் ஒரு பிரபலமான நடிகர் என்பதால் அவருக்கு இளைஞர்களிடம் அதிக வரவேற்பு இருப்பதாக தெரிகிறது..
நடக்கவுள்ள தேர்தலில் தவெக குறிப்பிட்ட சதவீத வாக்குகளை வாங்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. ஒருபக்கம் விஜய் நீலாங்கரை வீட்டில் தனியாக வசிக்க, அவரின் மனைவி சங்கீதா லண்டனில் வசிக்கிறார். மகனும், மகளும் சென்னையில் வெவ்வேற இடங்களில் தனியாக வாழ்கிறார்கள்..
இந்நிலையில்தன், விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகினார். மேலும் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல், விஜய் திரிஷாவுடன் ஒரு திருமணத்திற்கு சென்றதும் சர்ச்சையை கிளப்பியது.
ஒருபக்கம், விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குனராக மாறியிருக்கிறார்.. லைக்கா தயாரிப்பில் சிக்மா என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.. இந்த படம் விரைவில் வெளியாகியுள்ளது.. புதிய படத்தின் டைட்டில் கார்டு மற்றும் கையெழுத்துகளில் ஜேசன் சஞ்சய் தந்தையின் பெயரை பயன்படுத்தில்லையாம். தந்தையின் பெயருக்கு பதிலாக Jason Sanjay S என்று மட்டுமே குறிப்பிடுகிறார். அதில் S என்பது அவரின் தாய் சங்கீதாவை குறிப்பதாக சொல்லப்படுகிறது..