1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. pawan kalyan says its easy to win in tamilndu

போஸ்டர் ஒட்டியே விஜய் முதல்வராயிட்டார்!.. என்னால முடியல!.. பவன் கல்யாண் ஃபீலிங்...

pawan kalyan
நடிகராக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருப்பவர் விஜய். 30 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்று அரசியல் கட்சியை தொடங்கினார்.

தவெகவுக்கு ஆதரவாக ஒரு பெரிய டீம் சமூக வலைத்தளங்களில் இயங்கியது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராமில் தவெக மற்றும் விஜயின் புகழ் பாடும் வீடியோக்களும், புகைப்படங்களும், ஹோலோகிராம் விளம்பரங்களும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருந்தது..

அதோடு சிறு குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களை விஜய்க்கு வாக்களிக்க வைத்ததால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைத்திருக்கிறது. அதேநேரம் காங்கிரஸ், விசிக, முஸ்லீம் லீக் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி தமிழகத்தில் நிகழ்ந்திருக்கிறது..

இந்நிலையில், நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ‘15 ஆண்டுகளாக போராடியும் என்னால் சாதிக்க முடியவில்லை.. ஆனால் தமிழ்நாட்டில் வெறும் போஸ்டர் ஒட்டியே ஒருவர் முதல்வராகிவிட்டார். தமிழ்நாட்டில் அரசியல் செய்வது மிகவும் சுலபம் போல.. போஸ்டர்கள். ஹாலோகிராம் விளம்பரங்களை வைத்து தமிழ்நாட்டில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து விடுகிறார்கள்..  எனக்கு பொறாமையாக இருக்கிறது..15 ஆண்டுகளாக நான் அரசியலில் சுற்றி வந்தாலும் அது போன்ற வெற்றியை என்னால் பெற முடியவில்லை’ என பவன் கல்யாண் பேசியிருக்கிறார்..
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?.. முதல்வர் விஜய் இன்று ஆலோசனை...