தொடர்புடைய செய்திகள்
- 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும்!.. சுகாதாரத்துறை கெடுபிடி!...
- அடிக்கடி வந்து சோதனை செய்வேன்: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்
- ரூ.10,000 கோடி விடுவித்த மத்திய அரசு.. இணக்கமாக இருந்த தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி..!
- 51 லட்சம் செலவு செய்து சுரங்கப்பாதை அமைத்தார்களா திமுக அரசு ? வெறும் குழியை தோண்டிவிட்டு பணம் ஸ்வாகாவா?
- மக்களின் ஆதரவில் உருவான விஜய்க்கு எதற்கு ஊடக அங்கீகாரம்.. மக்கள் தான் மிகப்பெரிய ஊடகம்.
சொத்து வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. இனிமேல் மேனுவல் என்பதே கிடையாது.. எல்லாமே ஆன்லைன் தான்...
தமிழகத்தில் சொத்து வாங்குவோரின் வசதிக்காக நில அளவைத்துறை ஒரு புதிய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, உட்பிரிவு உருவாக்க வேண்டிய பட்டா மாறுதல் விண்ணப்பங்களை, இனி மேனுவல் முறையில் காகித ஆவணங்களாக ஆய்வு செய்யாமல், முழுமையாக ஆன்லைன் முறையில் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறைப்படி, இ-சேவை மையங்கள் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நில அளவையர்களுக்கு ஆன்லைன் வழியாக அனுப்பப்படுகின்றன. இருப்பினும், நிலத்தை அளந்த பின் வரைபடம் தயாரித்தல் மற்றும் கள ஆய்வு அறிக்கைகளை நில அளவையர்கள் இதுவரை காகித ஆவணங்களாக மேனுவல் முறையிலேயே செய்து வந்தனர். இந்த இரட்டை வேலையால் பட்டா மாறுதல் பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டது.
இனி இத்தகைய காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு, மேனுவல் நடைமுறை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து நில அளவையர்களும் தங்களுக்கு துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளை பயன்படுத்தி, ஆன்லைன் முறையிலேயே தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நில அளவைத்துறையின் இந்த முழுமையான டிஜிட்டல் மாற்றத்தால், பொதுமக்கள் தங்களது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் உத்தரவை எவ்வித தாமதமுமின்றி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் ஆன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்ள முடியும். இது பட்டா மாறுதலில் நிலவி வந்த காலதாமதத்திற்கும், முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
