1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
  4. kp-munusamy-slams-cm-vijay-tvk-aiadmk-not-contacted-eps

நேரம் கேட்கவில்லை... தொடர்பும் கொள்ளவில்லை - கே.பி.முனுசாமி

tvk
தவெக சார்பில்  எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் நேரம் ஒதுக்கவில்லை என்று  அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில்  செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி,  தமிழக முதல்வர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம் கேட்டதாகச் சொல்லப்படும் தகவல்கள் முற்றிலும் வதந்தி. தவெக தரப்பிலிருந்து ஈபிஎஸ் அலுவலகத்தை யாரும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. இதில் துளியும் உண்மையில்லை  எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
 
மேலும் அவர் பேசியபோது, "விஜய் அவர்கள் தனது பேசும் பாணியை மாற்றிக்கொள்ள வேண்டும். இது திரையுலகம் அல்ல, அரசியல் களம். இங்கு வார்த்தைகள் கவனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்  என அறிவுறுத்தினார்.
 
அதிமுக 31 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த பேரியக்கம். தேசியக் கட்சிகளுடனேயே நேருக்கு நேர் மோதி வென்ற இயக்கம் இது. அப்படிப்பட்ட ஒரு இயக்கம், புதிய கட்சிகளால் தனது தனித்துவத்தை இழக்கும் என்று நினைப்பது அறியாமை.தவெக-விற்கு இன்னும் முறையான கட்சி அமைப்பே இல்லை. ஆனால், அதிமுகவிற்கு தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை கிளைக் கழகங்கள் உள்ளன. எந்தக் காலத்திலும் அதிமுக தீர்ந்து போகாது.
 
விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்கள் குறித்துக் குறிப்பிட்ட அவர், இடைத்தேர்தல் வரட்டும், அப்போது அதிமுகவின் பலம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக மக்கள் இன்றும் இரட்டை இலை மீதும், எடப்பாடியார் தலைமை மீதும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தேர்தல் களத்தில் அதை நாங்கள் நிரூபிப்போம் எனக் சவால் விடுத்தார்.
About Writer
பாலகிருஷ்ணன்