1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy comment about tvk vijay

துணிக்கடைக்கு நடிகை வந்தா கூட்டம் கூடும்.. ஆனா துணி எடுக்க மாட்டாங்க!.. விஜயை நக்கலடித்த பழனிச்சாமி!...

eps vijay
தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில் நடிகர் விஜய் புதிதாக அரசியலில் களமிறங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி கடந்த இரண்டு வருடங்களாக அவர் அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். அவர் எங்கு சென்றாலும் அவரை பார்க்க இளைஞர்களும், பொதுமக்களும் கூடுகிறார்கள். விஜயை எப்படியாவது அருகில் பார்க்க வேண்டும் என்று ஆவல் பலரிடமும் இருக்கிறது..

அதனால்தான் அவர் சொல்லும் பல இடங்களிலும் அவரால் பிரச்சாரம் கூட செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதை பயன்படுத்தி காவல்துறையும் அவருக்கு பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.. இன்று கூட அவர் போலீசார் கடுமையான நிபந்தனை விதித்ததால் அவர் சென்னையில் செய்யவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

விஜய் பிரச்சார வாகனத்தில் செல்லும்போது சாலையெங்கும் அவரை பார்ப்பதற்காக பொதுமக்கள் நிற்கிறார்கள்.. குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் அவரை பார்க்க வருகிறார்கள்.. அதோடு அவரின் பிரச்சார வாகனத்திற்கு முன்னும் பின்னும், இரு பக்கமும் இருசக்கர வாகனங்களில் சென்று செல்பி எடுக்க முயற்சி செய்கிறார்கள்.. சிலரெல்லாம் ஆர்வக்கோளாரில் விஜயின் வண்டியின் மீது கூட ஏறிவிடுகிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது தமிழக அரசியலில் ஒரு புதிய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறாமல் போனால் கூட விஜய் 20 சதவீத வாக்குகளை வாங்குவார் என கணிக்கப்படுகிறது..

இந்நிலையில்தான், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விஜய் பற்றி பேசியபோது ‘ஒரு நடிகர் சென்றால் அங்கே கூட்டம் கூடும்.. ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்கு நடிகைகள் வரும்போது அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களை பார்க்க வியப்போடு வருவார்கள்.. ஆனால் அவர்கள் அனைவரும் அந்த கடையில் துணி எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது.. அந்த வியப்பு பார்ப்பதோடு சரி.. அது ஓட்டாக மாறுமா என்பதை தேர்தல் முடிவுகளில்தான் பார்க்க முடியும்’ என சொல்லியிருக்கிறார்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா? ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை