தேமுதிகவுக்கு எம்.பி சீட் கொடுக்குறன்னு சொன்னேன்.. ஆனா ஒரு கண்டிஷன்!.. பழனிச்சாமி ஒப்பன்!..
eps
விஜயகாந்த் தேமுதிகவை துவங்கியது முதலே தனித்துப் போட்டியிட்டு வந்தார். அதேநேரம், 2011 ஆம் வருடம் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. திமுகவை விட அதிக தொகுதிகளை பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக மாறினார். விஜயகாந்த் உடல்நிலை காரணமாக அவர் அரசியலில் இருந்து விலகியிருக்க அந்த கட்சியின் வாக்கு வங்கி வெகுவாக குறைந்தது. தற்போது விஜயகாந்த் இல்லாத நிலையில் அவரின் மனைவி பிரேமலதா அந்த கட்சியை வழிநடத்தி வருகிறார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அவர் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
கலைஞருடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் விஜயகாந்த். இந்த கூட்டணி எப்போதே அமைய வேண்டியது.. தற்போது அவர்கள் இருவரும் இல்லாத நிலையில் கூட்டணி அமைந்திருக்கிறது என்று மட்டும் தொடர்ந்து சொல்லி வருகிறார்.. ஒரு பக்கம் தேமுதிகவுக்கு அரை சதவீத வாக்குவங்கு கூட இல்லை. ஆனால் அந்த கட்சிக்கு 10 தொகுதியும் ஒரு ராஜ்யசபா தொகுதியையும் ஸ்டாலின் கொடுத்திருக்கிறார்.. இரண்டு சதவீத வாக்கு வங்கி வைத்திருக்கும் விடுதலைச் சிறுத்தை, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு கொடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.. இது பிரேமலதாவை கோபப்படுத்தி இருக்கிறது..
இதையடுத்து 2024ம் வருடம் நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்த போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா கொடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி ஒத்துக் கொண்டார் என சொல்லி அதற்கான ஆவணத்தை செய்தியாளரிடம் பிரேமலதா காட்டினார். அதோடு, சீட் கொடுப்பதாக சொல்லி பழனிச்சாமி ஏமாற்றி விட்டார் என கூறினார்.
