1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijay fans fell down in pondichery

மீண்டும் மீண்டுமா!.. புதுச்சேரியில் விஜயின் வேனை ஃபாலோ பண்ணி விபத்தில் சிக்கிய ரசிகர்கள்!.

vijay
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் புதுச்சேரியிலும் போட்டியிடுகிறது. எனவே, இன்று அவர் பிரச்சாரத்திற்கு அங்கே சென்றுள்ளார். விஜய் வெளியே வந்தாலே அவர் செல்லும் வழியெங்கும் அவரை காண ரசிகர்களும், பொதுமக்களும் கூடிவிடுகிறார்கள். இதனால், விஜயின் வேன் மெதுவாக செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒருபக்கம், விஜயை அருகில் பார்ப்பதற்காக அவரின் ரசிகர்கள் இரு சக்கர வாகனங்களில் துரத்துகிறார்கள்.

அப்படி செல்லும்போது சிலர் கீழே விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். விஜய் தஞ்சாவுக்கு சென்றாபோது கூட ஒரு கல்லூரி வாலிபர் கீழே விழுந்து இறந்துபோனார். இந்நிலையில்தான் விஜய் புதுச்சேரிக்கு பிரச்சாரம் செய்வதற்காக இன்று சென்றிருக்கிறார் விஜய். முதலில் தட்டாஞ்சாவடி மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.அதன்பின் கடலூர் சாலை மால் அருகிலும், அடுத்து தவளக்குப்பம் ஜங்சன் பகுதியிலும் விஜய் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். புதுச்சேரியில் விஜயை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர்.

போலீசாரால் அவர்களை கட்டுப்படுத்தமுடியவில்லை. என் வாகனத்தின் பின்னால் பைக்கில் வரவேண்டாம் என விஜய் பலமுறை சொல்லியும் அவரின் ரசிகர்கள் கேட்கவில்லை. புதுச்சேரியிலும் சிலர் அப்படி விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்து கீழே விழுந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த கட்டுரையில்
வழக்கம்போல் லேட்!. புதுச்சேரி பிரச்சாரத்தில் சொதப்பிய விஜய்!.. தொடர்ந்து நடக்குமா?..