வடிவேலு காமெடி நிஜமாயிடுச்சி!. ஃபில்அப் பண்ணாம வேட்புமனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர்!..
ஒரு படத்தில் வடிவேலு ஒரு வங்கியில் கொள்ளையடிப்பதற்காக தனது நண்பர்களோடு செல்வார்.. வங்கியில் கொள்ளையடிக்க வந்திருக்கிறேன் என்பதை ஒரு கடிதம் போல ஒரு பேப்பரில் எழுதி அங்கு பணிபுரியும் ஒரு அதிகாரியிடம் கொடுப்பார். அவர் வடிவேலு கொடுத்த கடிதத்தை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு அதில் பிழைகள் இருப்பதாகவும் அதை திருத்தி கொடுத்தால் மட்டுமே நாங்கள் உங்களுக்கு பணம் கொடுப்போம் என்று சொல்லி வடிவேலுவை அசால்ட்டாக டீல் பண்ணுவார். தற்போது வந்த காமெடி உண்மையாகியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் தவெக வேட்பாளர் அன்னை சரவணன். இவர் இவர் ஒரு லாட்டரி ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார். இவர் இன்று வைகுண்டம் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக
தனது ஆதரவாளர்களுடன் வந்தார்.
அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளை பார்த்து பதட்டமாகிக் கொண்டே இருந்தார் சரவணன். அதன்பின் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை கொடுப்பது போல போட்டோவுக்கு போஸ் எல்லாம் கொடுத்தார். ஆனால் அந்த வேட்பு மனுவை வாங்கி பார்த்த அதிகாரிக்கு அதிர்ச்சி.. ஏனெனில் அதில் எதுவும் நிரப்பப்படவில்லை. ஒரு தகவல் கூட அதில் குறிப்பிடப்படவில்லை.. அதைவிட வேட்பாளரின் கையெழுத்து கூட அதில் இல்லை..
அதைக்கண்டு அதிர்ச்சியான தேர்தல் அதிகாரி இதுல எதுவும் ஃபில் அப் பண்ணல.. மனுவை ஃபில் அப் பண்ணி கொண்டு வாங்க.. என்று சொல்ல அருகில் இருந்த சரவணனின் ஆதரவாளர் ஏதாவது ஆவணத்தை இணைக்க வேண்டுமா?.. 3 நிமிஷந்தான் ஆகும்.. நீங்களே ஃபில் அப் பண்ணி கொடுங்க என சொல்ல, அதிகாரியோ 3 மணி வரைக்கும் இங்க இருப்பேன். நீங்க ஃபில் அப் பண்ணி எடுத்துட்டு வாங்க என சொல்ல வந்த வேகத்தில் அங்கிருந்து கிளம்பிசென்றார் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக வேட்பாளர் சரவணன். இந்த செய்தியை பல ஊடகங்களும் எடுத்து போட்டு தவெகவை ட்ரோல் செய்து வருகிறது.