அரக்கனை விட கொடியவர் செந்தில் பாலாஜி!.. விளாசிய எடப்பாடி பழனிச்சாமி...
அதிமுகவில் எம்எல்ஏ, அமைச்சர் ஆகிய பதவிகளில் இருந்தவர் செந்தில் பாலாஜி. கரூர் மாவட்டத்தில் செல்வாக்கு பெற்றவர். செந்தில் பாலாஜியை நம்பி கொடுத்தால் அந்த தொகுதியில் வெற்றி பெற்றுக் கொடுப்பார் என்கிற நம்பிக்கையை கட்சி தலைமையிடம் ஏற்படுத்தியதுதான் செந்தில் பாலாஜியின் பலம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவில் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்பதால் திமுகவுக்கு மாறினார்.. திமுகவில் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது..
செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது அவரை கடுமையாக விமர்சிவர்தான் மு.க ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்ததும் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வார் என்றெல்லாம் பேசினார்.. ஆனால் அதை செந்தில் பாலாஜியை திமுகவில் சேர்த்துக்கொண்டார் முக ஸ்டாலின்.
தற்போது கரூரில் நிக்காமல் கோவையில் போட்டியிடுகிறார் செந்தில் பாலாஜி..
இந்நிலையில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அரக்கனை விட கொடியவர் செந்தில் பாலாஜி.. 5 கட்சிகளுக்கு சென்றவர் அவர்.. வைரஸை விட மோசமான ஒருவர்.. கரூரை முடித்துவிட்டு தற்போது கோவைக்கு மாறியிருக்கிறார். கோடு போட்டால் ரோடு போடுவாராம் செந்தில் பாலாஜி.. கரூரில் ரோடு போட்டு ஊழல் செய்தவர்.. பத்து ரூபாய் கமிஷன் அடித்தவரை கோவையின் சிம்ம சொப்பனம் என்கிறார் முதல்வர் ஸ்டாலின். கோவை செல்வம் கொழிக்கும் பகுதி என்பதால் இங்கு நிற்கிறார்.. ஏன் அவர் கரூரில் நிற்கவில்லை? என அவர் கேள்வி எழுப்பினார்..