பால்டாயில் குடிச்சதெல்லாம் பன்ச் வசனம் பேசுது!.. உதயநிதியை பங்கம் பண்ணிய பழனிச்சாமி...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க துவங்கியிருக்கிறது. கடந்த பல நாட்களாகவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மற்றும் முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தாவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
வழக்கம்போல் தனிப்பட்ட தாக்குதல்கள் தொடங்கிவிட்டன.. சீமானை தவிர வேறு யாரும் யாரும் ஒரு கொள்கை வைத்தோ, தாங்கள் என்ன சாதனைகளை செய்தோம் என்று சொல்லியோ ஓட்டுக்கள் கேட்பதில்லை.. மாறாக, யார் அவர்களின் எதிரியோ அவர்களை திட்டியும், மட்டம் தட்டி பேசி மட்டுமே வாக்குகளை கேட்கிறார்கள்.. குறிப்பாக இதை திமுக அதிகமாக செய்து வருகிறது..
குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் தனது பிரசாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை மிகவும் மட்டம் தட்டி பேசி வருகிறார்.. ஏற்கனவே அவர் 10 தோல்வி பழனிச்சாமி.. தற்போது அவரை 11வது தோல்வி பழனிச்சாமியாக மாற வேண்டும்... அவர் இரட்டை இலை சின்னத்தை காட்டுவதற்கான காரணமே ஏற்கனவே 10 தோல்வி அடைந்து விட்டேன்.. இந்த முறை 11வது தோல்வி என்பதைத்தான் அவரே காட்டி வருகிறார்.. பழனிச்சாமியை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றெல்லாம் அவர் பேசி வருகிறார்...
அதோடு பாஜகவின் அடிமையாக எடப்பாடி பழனிச்சாமி செயற்பட்டு வருகிறார் என அவர் பல இடங்களிலும் பேசி வருகிறார். இது பழனிச்சாமிக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. இந்நிலையில் நேற்று பிரச்சாரத்தில் பேசிய பழனிச்சாமி பால்டாயில் குடிச்சதெல்லாம் பன்ச் வசனம் பேசுது.. அது அப்பவே போய் சேர வேண்டியது.. இப்ப உசுரோட இருந்து நம்ம உசுர வாங்குது என்று பேசியிருக்கிறார்..
சில வருடங்களுக்கு முன்பு ஒரு நடிகையுடன் நடித்த போது அவர் மீது உதயநிதிக்கு காதல் வந்ததாகவும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என வீட்டில் பிரச்சனை செய்து அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் ஒரு வதந்தி உண்டு. அதைத்தான் எடப்பாடி பழனிச்சாமி இப்படி சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..