1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sasikala says udhyanidhi is right

உதயநிதி காட்டுவதில் என்ன தப்பு!.. நீங்க என் காலில் விழலயா?!.. போட்டுதாக்கும் சசிகலா!...

sasikala
திமுக கடந்த சில தேர்தல்களில் பிரச்சாரம் செய்யும் போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் அடிமையாக மாறிவிட்டார்.. அவர் சசிகலா காலில் விழுந்தவர் என்று கூறி சசிகலாவின் காலில் எடப்பாடி பழனிச்சாமி விழுந்த வணங்கிய புகைப்படத்தை காட்டி பிரச்சாரம் செய்து வருகிறது..

குறிப்பா துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதை தொடர்ந்து செய்து வருகிறார்.. தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையிலும் பழனிச்சாமி சசிகலா காலில் விழுந்த போஸ்டரை கையில் பிடித்துக் கொண்டு காட்டி ‘இத போட்டோவை பாருங்க.. இங்கே ஒருவர் படுத்திருக்கிறார்.. இப்படிப்பட்ட பழனிச்சாமிக்கு நீங்கள் ஓட்டு போட வேண்டுமா?’ என்றெல்லாம் அவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்..

இதில் கடுப்பான பழனிச்சாமி ‘பால்டாயில் குடிச்சதெல்லாம் பன்ச் டயலாக் பேசுது.. நீங்க என்ன காட்டுறது.. நானே காட்டுறேன்.. பெரியவங்க காலில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு?.. அம்மாவின் காலில் நாங்கள் விழுந்திருக்கிறோம் அது பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை.. அது உங்களுக்கு எப்படி புரியும்?’ என்று பதிலடி கொடுத்தார்.
udhyanidhi

இந்நிலையில், ராஜபாளையத்தில் பிரச்சாரம் பிரச்சாரம் செய்த சசிகலா ‘உதயநிதி காண்பிக்கும் புகைப்படம் உண்மைதானே.. தொலைக்காட்சிகளில் வந்த விஷயம்தானே.. அதற்காக அவரை அவதூறாக பேசக்கூடாது.. பதவி கொடுத்தவர்களுக்கு நன்றியாக இருந்திருக்க வேண்டும்.. வீட்டில் ஒரு நாய் குட்டி பிஸ்கட் போட்டால் கூட அது நன்றியோடு இருக்கும்.. அது கூட இல்லாமல் நீங்கள் செய்ததை அவர் காட்டுவதில் என்ன தவறு/’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்..
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
திமுகவுக்கு செக்!.. தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றம்!.. தேர்தல் ஆணையம் அதிரடி...