தம்பி திருமாவளவன் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை...
தமிழ்நாட்டில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றும் ஆட்சியமைக்க முடியவில்லை. ஏனெனில், ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. அதில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்திருக்கிறது. ஆனாலும் இன்னும் 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
எனவே, நேற்று மாலை மூன்றாவது முறையாக தவெக தலைவர் விஜய் ஆளுநரை நேரில் சந்தித்து தவெகவை ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை வைத்தார். ஆனாலும் இப்போதுவரை தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை.
இந்நிலையில், பாமக நிறுவனம் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை மதித்து புதிய ஆட்சியை ஏற்படுத்த தம்பி திருமாவளவன் உடனடியாக தவெகவுக்கு ஆதரவு அளிக்கவேண்டும். அவரின் ஆதரவைக்கொண்டு அமையும் புதிய அரசு சிறப்பாக செயல்படுத்த ஆலோசனைகளை வழங்கிடவேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறோம் என கூறியிருக்கிறார். இன்று மாலை 4 மணிக்கு மேல் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி திருமாவளவன் அறிவிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.