1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn governor consult about ttv dinakaran compaint

விஜய் மீது தினகரன் கொடுத்த புகார்!.. மத்திய அரசுடன் ஆலோசிக்கும் ஆளுநர்!..

vijay ttv
தவெக ஆட்சியமைக்க தேவையான ஆதரவு எம்.எல்.ஏக்கள் இல்லாத நிலையில், நேற்று மாலை தவெக தலைவர் விஜய் அளுநரிடம் கொடுத்திருந்த ஆதரவு கடிதத்தில் அம்முக எம்.எல்.ஏ காமராஜின் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால், எங்கள் எம்எல்ஏவை காணவில்லை என டிடிவி தினகரன் காவல்நிலையத்திலும், ஆளுநரிடம் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அமமுக எம்.எல்.ஏ காமராஜ் நான் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதையடுத்து காமராஜ் ஒரு காரில் அமர்ந்துகொண்டு தவெகவை ஆதரிப்பதாக கடிதம் எழுதிய வீடியோவை தவெக வெளியிட்டு நாங்கள் யாரிடமும் பேரம் பேசவில்லை.. காமராஜ் முழு சம்பந்தத்துடன் தவெகவை ஆதரிக்க முன்வந்தார் என கூறியிருந்தது. ஆனால், டிடிவி தினகரன் இதை மறுத்துள்ளார். அது ஏஐ வீடியோ, அந்த வீடியோவை ஆளுநரிடம் தவெக காட்டட்டும்.. அவர்களே சிக்குவார்கள் என சொல்லியிருந்தார்.

இந்நிலையில், டிடிவி தினகரன் கொடுத்த புகார் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருடன் தமிழக பொறுப்பு ஆளுநர் ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளது. இது தவெகவுக்கு சிக்கலை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
விஜய் பெரிய நடிகரா இருந்தா எனக்கென்ன!.. வீடியோவை எடுத்தது யார்?.. டிடிவி தினகரன் கேள்வி!..