1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. doctor ramadoss starts his own party

அய்யா பாமக!. புது கட்சியை துவங்கிய டாக்டர் ராமதாஸ்!...

ramadoss
டாக்டர் ராமதாஸ் 1989ம் வருடம் பாட்டாளி மக்கள் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். வன்னியர்களுக்காக இந்த கட்சியை உருவாக்கப்பட்டது. எனவே அந்த சாதியின் ஓட்டுக்கள் அந்த கட்சிக்கு கிடைத்தது. கடந்த பல வருடங்களாகவே சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக அல்லது திமுக என மாறி மாறி கூட்டணி அமைத்து பாமக..

அதேநேரம் கடந்த சில மாதங்களாகவே அன்புமணிக்கும் அவரின் தந்தை ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தார்கள். அன்புமணி பற்றிய பல குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் வைத்தார் ராமதாஸ்.. இனிமேல் எனக்கு அவன் மகனே அல்ல.. அவனை நான் மத்திய அமைச்சர் ஆக்கியது நான் செய்த மிகப்பெரிய தவறு.. என் மார்பில் எட்டு உதைத்து விட்டான். என் முதுகில் ஈட்டியால் குத்திவிட்டான். பெற்ற தாயை அடிக்க வந்தான்’ என்றெல்லாம் பரபரப்பு பேட்டி கொடுத்தார் ராமதாஸ்..

ஒருபக்கம் பாமகவுக்கு நான்தான் தலைவர் என நீதிமன்றத்தை அணுகினார் ராமதாஸ். ஆனால் 2026 ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணிதான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டது. அதோடு அதிமுக - பாஜக கூட்டணியில் அன்புமணியும் இணைந்து விட்டார். அந்த கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான், ஐயா பாமக என்கிற புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் விண்ணப்பம் கொடுத்திருக்கிறார். ஐயா பாசறை மக்கள் கட்சி என்பதன் சுருக்கமாக அய்யா பாமக என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க விண்ணப்பத்திற்காக தகவல் வெளியாகியிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
அன்புமணி பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் என்னென்ன?!.. வாங்க பார்ப்போம்!..