ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (13:56 IST)

உதயநிதி கலந்து கொண்ட அத்தனை தேர்தலிலும் திமுகவிற்கு வெற்றி.! ஆர்.எஸ்.பாரதி..

RS Bharati
உதயநிதி அரசியலில் கால் வைத்த நாள் முதல் உதயநிதி கலந்து கொண்ட அத்தனை தேர்தலிலும் திமுகவிற்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
 
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக மூத்த தலைவர்கள் முதல் கடைசித் தொண்டன் வரை நீண்ட காலமாக எதிர்பார்த்த ஒன்றை முதலமைச்சர் அறிவித்திருப்பதாக தெரிவித்தார்.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க இருப்பதால் திமுகவில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் எனவும் எதிர்பார்த்ததை முதலமைச்சர் அறிவித்திருப்பது அனைத்து தொண்டர்களுக்கும் மன நிறைவு அளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
தொடர்ந்து திமுகக்கு வெற்றி மேல் வெற்றிதான், காரணம் உதயநிதி அரசியலில் கால் வைத்த நாள் முதல் உதயநிதி கலந்து கொண்ட அத்தனை தேர்தலிலும் திமுகவிற்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

 
திமுகவின் வெற்றி தொடர் வெற்றியாக அமையும் என்றும் வருங்காலம் திமுகவிற்கு பிரகாசமாக உள்ளது என்றும் ஆர்.எஸ் பாரதி குறிப்பிட்டார்.