பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு பிறகு, குற்றவாளியால் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இரும்புக் கம்பி செருகப்பட்டதால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. டெல்லி நிர்பயா சம்பவத்தை நினைவுபடுத்தும் இந்த சம்பவத்தில், சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நிலைபெற்றுள்ளார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராம்சிங் தேஜ் சிங் என்ற நபர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 4 ஆம் தேதி காலை, ஜஸ்தான் பகுதியில் உள்ள அட்கோட்டில் ராம்சிங் இந்த தாக்குதலை நடத்தியதாக காவல்துறை கண்காணிப்பாளர் விஜய் சிங் கூர்ஜர் தெரிவித்தார்.
சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், குற்றவாளியை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிறுமி புகைப்படத்தின் மூலம் அடையாளம் காட்டியதை அடுத்து, ராம்சிங் உடனடியாக கைது செய்யப்பட்டு, குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக்கம்பியும் பறிமுதல் செய்யப்பட்டது.
நீதித்துறை நடைமுறைகளை விரைந்து முடிப்பதற்காக, ராம்சிங்கை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை கோரவுள்ளது.
Edited by Siva