வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (13:43 IST)

'ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி' - அடுத்த சர்ச்சையில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்..!!

Air India
ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவருக்கு பரிமாறப்பட்ட ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஏர் இந்தியா விமான நிறுவனம் சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்நிலையில் டில்லியை சேர்ந்த சுயிஷா சாவந்த், தனது 2 வயது குழந்தையுடன்  ஏர் இந்தியா விமானம் மூலம் டில்லியில் இருந்து நியூயார்க் சென்றார். அப்போது விமானத்தில் பயணிகளுக்கு ஆம்லெட்டுடன் கூடிய மதிய உணவு கொடுக்கப்பட்டது.

ஆம்லெட்டை   தனது குழந்தைக்கு ஊட்டியபடி சுயிஷா சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது 'ஆம்லெட்டில் ஒரு கரப்பான் பூச்சி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அலறி அடித்து கொண்டு விமான பணிப்பெண்களிடம் புகார் அளித்தார். அவர்கள் பதில் அளிக்காமல் மவுனம் காத்தனர். 
 
இதனால் ஆத்திரமடைந்த சுயிஷா, தனது மொபைல் போனில் ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி இருந்ததை வீடியோவாக எடுத்து கொண்டார். நியூயார்க் நகரில் விமானம் தரையிறங்கிய உடனே ஏர் இந்தியா நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதற்கு ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கேட்ட நிலையில், ஆம்லெட்'டில் கரப்பான் பூச்சி கிடந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார். 

 
தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூகவலைதளத்தில் கமென்ட் செய்து வருகின்றனர்.