செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (11:09 IST)

உதயநிதி துணை முதல்வராவதால் தமிழ்நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது: எல்.முருகன்

L Murugan
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள நிலையில், இதனால் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று தூர்தர்ஷன் அலுவலகத்தில் "தூய்மையே சேவை" என்ற பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல். முருகன், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதால் தமிழ்நாட்டுக்கு முன்னேற்றம் எதுவும்   வரப்போவதில்லை என்றும் கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்த பின், மதுப் பொருட்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், அந்த சந்திப்பின் அடுத்த கட்டமாக பிரதமர் அலுவலகம் வழியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது, 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.


Edited by Siva