ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!
குஜராத் மாநிலதை சேர்ந்த 36 வயது இளைஞர் மேக்ராஜ் பாய் தேஷ்முக், ஒரே நேரத்தில் காஜல் காவிட் மற்றும் ரேகா பென் கெயின் ஆகிய இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
வெளி நபர்களுக்கு இது அசாதாரணமானதாக தோன்றினாலும், மேக்ராஜ் பாயின் பழங்குடி சமூகத்திற்குள் இத்தகைய ஏற்பாடுகள் கலாச்சார ரீதியாக ஏற்கப்பட்டவை ஆகும்.
மேக்ராஜ் பாய், 2010 இல் காஜல் காவிட் உடனும், 2013 இல் ரேகா பென் கெயின் உடனும் உறவை தொடங்கினார். இருவரையும் நிராகரிக்க முடியாமல், அவர் இருவருடனும் சேர்ந்து வாழும் 'லிவ்-இன்' உறவை தொடங்கினார். இந்த முடிவை பழங்குடி சமூகம் 'சந்தலா விதி'யின் கீழ் அங்கீகரித்தது.
இந்த கிராமத்தின் வழக்கப்படி, தம்பதிகள் நிதி ரீதியாக நிலைபெறும் வரை முறைப்படி திருமணம் செய்துகொள்வதற்கு முன் கணவன் மனைவியாக வாழ அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேக்ராஜ் பாய் மற்றும் அவரது துணைகள் இந்த வழியை பின்பற்றி, காஜலுடன் இரண்டு குழந்தைகளையும், ரேகாவுடன் ஒரு குழந்தையையும் வளர்த்த பிறகு, தற்போது பாரம்பரிய சடங்குகளுடன் திருமணம் செய்துகொண்டனர். இது அக்கிராமத்தில் அன்பு, பொறுப்பு மற்றும் பாரம்பரியத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran