செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (11:14 IST)

இனி திராவிட மண்ணுக்கு நீயே துணை.! உதயநிதிக்கு செந்தில் பாலாஜி வாழ்த்து..!!

Udayanithi
துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில்  உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 
 
ஒரு ஆண்டு 9 மாதங்களுக்குப் பிறகு அவருக்குத் துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று மாலை 3:30 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார்.
 
இந்நிலையில் துணை முதலமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு, செந்தில் பாலாஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

எங்கள் இதயம், 
தமிழ்நாட்டின் உதயம்.!
 
இன்று,
திராவிட மாடல் நாயகருக்கு துணை..
இனி,
திராவிட மண்ணுக்கும் நீயே துணை.!
 
இளையசூரியனே..
 
மாண்புமிகு தமிழ்நாடு 
துணை முதலமைச்சர் அவர்களே.!
 
வாழ்த்துகிறோம்..
வணங்குகிறோம்..
உங்கள் பாதையில் நடக்கிறோம்.. என்று செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார்.