வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (08:17 IST)

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

தந்தை முதல்வராகவும், மகன் துணை முதல்வராகவும் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் எங்கு ஜனநாயகம் உள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டின் துணை முதல்வராக இன்று உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ள நிலையில், அவருக்கு திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்று மாலை 3:30 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் தனது பதவியை ஏற்க இருப்பதால், சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்தபோது, "தந்தை முதல்வர், மகன் துணை முதல்வர்; இங்கே எங்கு ஜனநாயகம் உள்ளது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "இது ஜனநாயக வழிமுறை என சொல்ல முடியாது; தமிழக அரசியலில் இது தவறான முன்னுதாரணம்" என கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva