தவெகவுடன் கூட்டணி!.. விசிக மீது கோபம்!.. நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் திமுக?...
கடந்த பல வருடங்களாக விடுதலை சிறுத்தை கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. இடையில் சில கூட்டணிகள் மாறினாலும் கடந்த இரண்டு, மூன்று தேர்தல்களாக திமுக கூட்டணியில் விசிக நீடிக்கிறது. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஆனால், ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டபோது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ். கம்யூனிஸ்ட். முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் ஆதரவு கொடுத்தன். இதனால் விசிகவும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்துவிட்டது. அதோடு தவெக அமைச்சரவையிலும் விசிக இடம் பெற்றுவிட்டது. அதாவது விசிக எம்.எல்.ஏ வன்னியரசுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. விசிக நிர்வாகிகள் விருப்பம் அதுவாக இருந்ததால் திருமாவளவனும் அதை ஏற்றுக்கொண்டார்.
தவெகவுக்கு விசிக ஆதரவு கொடுத்தபோது நாங்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தாலும் திமுக கூட்டணியில்தான் நீடிக்கிறோம் என திருமாவளவன் செய்தியாளரிடம் கூறினார். இதை திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்று பேசியிருந்தார். ஆனால் தற்போது விசிக தவெகவின் அமைச்சரவையில் இடம் பெற்றுவிட்டதால் வரும் தேர்தலில் விசிக திமுகவுடன் கூட்டணி அமைக்குமா இல்லை தவெகவுடன் தொடருமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு எனக் கூறிவிட்டு தற்போது அமைச்சரவையில் விசிக இடம் பெற்றது திமுக தலைமையை டென்ஷன் ஆக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, விசிகவின் முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க திமுக முடிவு செய்திருக்கிறதாம். விரைவில் பனையூர் பாபு மற்றும் ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் விசிகவிலிருந்து விலகி திமுகவில் இணைவார்கள் என சொல்லப்படுகிறது.