காசு தனித்தனியா கொடுத்தீங்களே.. ஸ்டேட்டஸும் தனித்தனியா கொடுத்திருக்கலாம்ல்ல.. எல்லாம் காப்பி பேஸ்ட்..
சமூக வலைத்தளங்களில் அரசியல் எதிரிகளால் பரப்பப்படும் போலியான அவதூறு பிரசாரங்கள் அப்பட்டமாக அம்பலமாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் தமிழக வாக்காளர்களை இழிவுபடுத்தும் நோக்கில், ஒரே மாதிரியான வாசகங்கள் அடங்கிய பதிவுகள் வெவ்வேறு கணக்குகளிலிருந்து 'காப்பி பேஸ்ட்' செய்யப்பட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன.
"விஜய முட்டான்னு நெனச்சதுல எந்த தப்பும் இல்ல, ஆனா தமிழ்நாட்டு மக்கள புத்திசாலியா நெனச்சது தான் தப்பு" என்ற ஒரே வரிகளை பல போலி கணக்குகள் அச்சுப்பிசகாமல் அப்படியே பதிவிட்டுள்ளன.
இதனை பார்க்கும் போது, "காசு தனித்தனியா கொடுத்தீங்களே.. ஸ்டேட்டஸும் தனித்தனியா கொடுத்திருக்கலாம்ல்ல" என்று நெட்டிசன்கள் இவர்களின் மலிவான அரசியல் உத்தியை கேலி செய்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் தவெக-விற்கு எதிராக ஒரு போலியான பிம்பத்தை உருவாக்க, கூலிக்கு ஆட்களை வைத்துக்கொண்டு இத்தகைய காரியங்கள் அரங்கேற்றப்படுவது இதன் மூலம் தெளிவாகிறது. தனித்தனியாகப் பணம் வாங்கி வேலை செய்யும் இந்தக் கூலிப்படையினருக்கு சொந்தமாகச் சிந்திக்க கூடத் தெரியாமல், ஒரே வாசகத்தை ஒட்டுமொத்தமாக நகலெடுத்துப் பதிவிட்டுத் தங்களின் சுயரூபத்தைத் தாங்களே வெளிப்படுத்தியுள்ளனர்.
இத்தகைய திட்டமிட்ட போலி பிரசாரங்களை விழித்துக்கொண்ட தமிழக மக்கள் தங்களின் விவேகத்தால் முற்றிலுமாக நிராகரித்து வருகின்றனர்.
Edited by Siva
