ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (12:46 IST)

அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல்: திமுக அமைச்சர்கள் கருத்து..!

duraimurugan
முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட திமுக பிரமுகர்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திமுக அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் மனோ தங்கராஜ் ஆவி அவர்கள் இந்த குறித்து காரணங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்
 
ஊழல் குறித்து பேச பாஜகவிற்கு எந்தவித தகுதியும் இல்லை என்றும் திமுகவினரின் சொத்து பட்டியல் என வீடியோ வெளியிட்டு மக்களை திசை திருப்ப பாஜக முயற்சி செய்வதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். மேலும் நீரவ் மோடி முதல் அதானி வரை பலருக்கு துணை போகும் பாரதி கட்சி பாரதிய ஜனதா கட்சி என்றும் அவர் கூறினார் 
 
அமைச்சர் துரைமுருகன் இதுகுறிட்த்து கூறிய போது திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிட்டு அண்ணாவலை அரசியல் ஸ்டண்ட் செய்கிறார் என்று கூறினார்.
 
Edited by Siva