2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்: அண்ணாமலை
திமுக பிரமுகர்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை இன்று வெளியிட்ட அண்ணாமலை 2024ஆம் ஆண்டுக்க் அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
ஒரு கட்சியின் ஊழல் பட்டியலை மட்டுமே வெளியிட வேண்டும் என்ற கொள்கை பாஜகவுக்கு கிடையாது என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் அடுத்தடுத்து வெளியிடப்படும் என்றும் குறிப்பாக 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே இந்த பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே அதிமுக உள்பட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று வெளியிடப்பட்ட ஊழல் பட்டியல் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பதில் சொல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva