வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (11:01 IST)

ரஃபேல் வாட்ச் பில்லை காட்டினார் அண்ணாமலை..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பில் எங்கே என்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஏப்ரல் 14ஆம் தேதி திமுக ஊழல் பட்டியலை வெளியிடும்போது வாட்ச் பில்லையும் வெளியிடுவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்தார். 
 
இந்த நிலையில் இன்று அவர் ஊழல் பட்டியலில் வெளியிட்டவுடன் ரஃபேல் வாட்ச் பில்லையும் வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியபோது, ‘ அவதூறுகளை அள்ளித் தெளிப்பதற்காக வரவில்லை, நான் சொல்வதற்கு ஆதாரம் இருக்கும், காவல் பணியில் இருந்த போது இலஞ்ச பணத்தில் ரபேல் பாக்ஸ் வாங்கியதாக திமுகவின தகவல் பரப்பினார்
 
ரஃபேல் வாட்ச் வரிசையில் 147 ஆவது வார்டு நான் வாங்கினேன் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து. மேலும் அதற்கான பில்லையும் காண்பித்தார். மேலும் எனது வீட்டு வாடகை ஊழியர்கள் சம்பளம் காருக்கு பெட்ரோல் அனைத்தையும் நண்பர்கள் தான் தருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva